இரண்டு நாள் தான்! கரும்புள்ளியை மறைக்கலாம்

Report Print Printha in அழகு

முகத்தின் அழகினை கெடுக்கும் வகையில் உள்ள கரும்புள்ளிகளை போக்க வெறும் இரண்டு நாட்களே போதும்.

கரும்புள்ளியை போக்கும் வழிகள்?
  • வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனால் நம் முகத்தில் உள்ள கருமைகள் மறைந்துவிடும்.
  • எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் பளபளக்கும்.
  • பால் மற்றும் சந்தனத்தை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து நீரில் கழுவி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
  • முல்தானி மெட்டியை ரோஸ் வாட்டரில் கலந்து, அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, காய்ந்ததும் நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.
  • கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து, அதனுடன் சிறிதளவு லாவண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து கழுவி வந்தால், கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments