முடி அதிகம் உதிர்கிறதா? இதெல்லாம் செய்திடுங்க

Report Print Santhan in அழகு
831Shares
831Shares
ibctamil.com

இளம்பெண்களுக்கு தற்போது இருக்கும் மிகப்பெரும் பிரச்சனை முடி உதிர்தல். தலையை வாரும்போது சீப்பில் கொத்தாக முடி இருப்பதைக் கண்டால், கண்ணீர் வடிக்கும் பெண்கள் ஏராளம்.

இதனை தடுக்க உணவு பொருட்கள் சிலவற்றை அழகு சாதன பொருட்களாகவும் பயன்படுத்தினால் போதும். அப்படியான சில உணவுபொருட்கள் குறித்து காணலாம்.

  • துளசிச்சாறு முடிக்கு வலு சேர்க்கும். துளசி சாற்றை தலை முடியில் தேய்த்து வந்தால், முடியின் நுண்ணறைகள் புத்துணர்ச்சி பெறும். மேலும், குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
  • கரும்புச் சாற்றில் முடி வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் பி12, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் கரும்புச் சாற்றில் உள்ளன. இதனால், முடி நீண்ட வளர்ச்சியுடனும் பொலிவுடனும் இருக்கும்.
  • ஆப்பிள்களில் பைரஸ் மேலஸ் எனும் நார்ச்சத்து உள்ளதால், முடியில் உள்ள பி.எச். அளவீட்டை சமநிலையில் வைத்திருக்கும். தலையில் உள்ள அழுக்கை நீக்கும் திறன் உள்ளது. இதனால், பொடுகு தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
  • ஆலிவ் ஆயிலை உணவில் சேர்த்துக் கொண்டால் பொடுகு தொல்லை குறையும். மேலும், முடியின் எண்ணெய் பிசுக்கை நீக்க வல்லது.
  • அவக்கோடா எனும் வெண்ணெய் பழத்தை தலையில் மாஸ்க் போன்று தடவினால், முடி வலுப்பெறும் மற்றும் ஊட்டமடையும்.
  • திராட்சை பழங்கள் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகளை கொண்டது. இது புறச்சூழலிலிருந்து நமது தோலை காக்கவல்லது. தோலுக்கு மிருதுத்தன்மையை அளிக்கும் கொலாஜன் எனப்படும் புரத உற்பத்திக்கு உதவுகிறது.
  • கிவி பழம் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ-ஐக் கொண்டுள்ளது. பொலிவான தோலை பெற இந்த பழம் உதவுகிறது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்