விமானம் தரையிறங்க முயன்றபோது மயக்கமான விமானி: அடுத்து நிகழ்ந்த அதிசயம்

Report Print Peterson Peterson in கனடா
847Shares
847Shares
ibctamil.com

கனடா நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முயன்றபோது அதன் விமானி திடீரென மயக்கமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள புளோரிடா நகரில் இருந்து ரொறன்ரோவிற்கு Air Canada Rouge என்ற பயணிகள் விமானம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் புறப்பட்டுள்ளது.

ரொறன்ரோ நகரில் உள்ள பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக அந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

விமானத்தை இயக்கிய விமான சில கிலோ மீற்றர் தொலைவில் திடீரென மயக்கமாகி விழுந்துள்ளார்.

இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த துணை விமான ஒரு வினாடி செய்வது அறியாமல் திகைத்துப்போய் அமர்ந்துள்ளார்.

பின்னர், தைரியத்தை வரவழைத்துக்கொண்ட துணை விமானி விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஓடுபாதையில் இறக்கியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக விமான பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், தகவல் அறிந்து தயார் நிலையில் இருந்த மருத்துவர்கள் விமானியை தூக்கிச்சென்று சிகிச்சை அளித்ததும் அவருக்கு நினைவு திரும்பியுள்ளது.

எனினும், விமானிக்கு திடீரென என்ன நிகழ்ந்தது என்ற தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

மிகவும் நெருக்கடியான சூழலில் தனியாகவும் திறமையாகவும் செயல்பட்டு பயணிகள் அனைவரின் உயிரையும் காப்பாற்றிய துணை விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments