கனடாவில் BlackBerry Keyone கைப்பேசிக்கான விலை அதிரடியாகக் குறைப்பு

Report Print Givitharan Givitharan in கனடா
96Shares

பிளாக்பெரி நிறுவனம் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் BlackBerry Keyone எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இதன் கறுப்பு நிற பதிப்பின் விலையானது 799 கனடிய டொலர்களாக காணப்பட்டது.

எனினும் தற்போது இதன் விலை குறைக்கப்பட்டு 648 கனடிய டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இக் கைப்பேசியானது 4.5 அங்ல அளவு, 1620 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் Qualcomm Snapdragon 625 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.

சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 2TB அதிகரிக்கும் வசதியும் காணப்படுகின்றது.

தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 3505 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்