ஐரோப்பிய யூனியனை போன்ற மற்றொரு அமைப்பு: இந்த நான்கு நாடுகள் இணைகிறதா?

Report Print Balamanuvelan in கனடா

பன்னாட்டு மக்கள் இயக்கம் ஒன்று ஐரோப்பிய யூனியனைப் போன்ற அமைப்பு ஒன்றை அமைப்பதற்காக கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

CANZUK International என்னும் அந்த இயக்கம் கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்துமற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் தங்களுக்குள் தடையற்ற போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் கொள்கை ஒத்துழைப்பு போன்றவற்றை அனுமதிக்கும் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்வதற்காக அழைப்பு விடுத்துள்ளது.

இந்த இயக்கத்திற்கு ஆதரவாக 200000 கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

CANZUK Internationalஇன் தலைவரான John Bender, இது நிச்சயம் வெற்றி பெறக்கூடிய திட்டம் என்கிறார்.

கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நான்கு நாடுகளுக்குமே இந்த ஒப்பந்தத்தில் பங்கு பெறுவது எளிதான விடயமாகும்.

காரணம் இந்த நான்கு நாடுகளுக்குமிடையே பல கலாச்சார ஒற்றுமைகள் காணப்படுகின்றன என்று கூறும் John Bender, ஏற்கனவே இந்த நான்கு நாடுகளும் அமெரிக்காவுடன்கூட Five Eyes என்னும் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்துள்ளன என்றும் கூறினார்.

CANZUK ஒப்பந்தம், இந்த நான்கு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தகம் மற்றும் புலம்பெயர்தலை அனுமதிப்பதன்மூலம் ஏற்கனவே இருக்கும் நல்லுறவுகளை இன்னும் மேம்படுத்தும்.

இருப்பினும் தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம் எனக் கருதப்படும் நபர்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் பாதுகாப்பு நடைமுறைகளும் இருக்கத்தான் செய்யும் என்றும் அவர் கூறினார்.

பிரித்தானியாவில் வசித்துவரும் John Bender, தான் ஏற்கனவே CANZUK ஒப்பந்தம் குறித்து பிரதமர் Theresa May மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் Boris Johnsonஉடன் பேசியிருப்பதாகவும், அவர்கள் தற்போது பிரெக்சிட் விடயமாக பிஸியாக இருந்தாலும், CANZUK ஒப்பந்தம் குறித்து ஆர்வமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கேட்பதற்கு இது ஒரு அருமையான திட்டம் போல் தோன்றினாலும், அது தொடர்பான பலகேள்விகள் எழும்பாமல் இல்லை.

உதாரணமாக கனடா நாட்டவர் ஒருவர் நியூஸிலாந்தில் ஓய்வு பெற விரும்பினால் என்ன செய்வது?

அவுஸ்திரேலியாவில் வாழும் ஒருவருக்கு கனடாவில் பணிக் காப்பீடு வழங்குவது யார்?

பிரித்தானியாவில் கனடியர்ஒருவருக்கு என்ன மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்?

இது போன்ற கேள்விகளுக்கு யாரிடமும் தெளிவான பதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்