கனடா- அமெரிக்கா மோதலுடன் முடிவடைந்த ஜி7 உச்சி மாநாடு

Report Print Fathima Fathima in கனடா
325Shares
325Shares
ibctamil.com

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜனாதிபதி டிரம்ப் மோதலுடன் ஜி7 உச்சி மாநாடு நிறைவறைந்துள்ளது.

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜேர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது.

உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை தங்களோடு இணைத்துக் கொண்டதால் ரஷ்யா இந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இதில் பங்கேற்க ரஷ்யா விரும்புவதாக தெரிவித்த டிரம்ப், மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

ஆனால் மற்ற நாடுகள் ரஷ்யா இதில் கலந்து கொள்ளக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தன.

இதன்போது அமெரிக்காவை நேரடியாக குற்றம்சாட்டிய கனடா பிரதமர், உருக்கு, அலுமினியம் போன்றவற்றின் மீது டிரம்ப் இறக்குமதி வரியை விதித்து இருப்பதும் அவருக்கு எதிரான நிலையை பிற நாடுகள் எடுக்க வைத்து விட்டன, இது சட்டவிரோதமானது என கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் ஜி7 கூட்டறிக்கைக்கு தான் அளித்த ஒப்புதலை திரும்ப பெற்றுள்ள டிரம்ப், டுவிட்டரில் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்