கனேடியருக்கு இழப்பீடு வழங்க வற்புறுத்தும் ஐ.நா. அமைப்பு: பின்னணி

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் Quebecஐச் சேர்ந்த ஒரு நபர் மெக்சிகோ சிறை ஒன்றில் சித்திரவதை செய்யப்பட்டதற்காக சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒன்று அவருக்கு இழப்பீடு வழங்கும்படி கனடா அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

Régent Boily மெக்சிகோவில் வசிக்கும்போது போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையிலிருந்து கூட்டாளிகள் உதவியுடன் அவர் தப்ப முயலும்போது சிறைக்காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். கனடா திரும்பிய Régent Boily சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் அவரை தங்கள் நாட்டிற்கு அனுப்ப மெக்சிகோ கோரியதையடுத்து கனடா அரசாங்கம் அவரை மெக்சிகோவுக்கு நாடு கடத்தியது.

மெக்சிகோவில் எந்த சிறையிலிருந்து தப்ப முயலும்போது சிறைக்காவலர் ஒருவர் கொல்லப்பட்டாரோ அதே சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார் Régent Boily.

அங்குள்ள காவலர்கள், இறந்த காவலரின் மரணத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக Régent Boilyயை சித்திரவதை செய்தனர்.

தண்ணீர்த்தொட்டிக்குள் அவரது முகத்தை மூழ்கச் செய்தும், பிளாஸ்டிக் கவரால் அவரது முகத்தை மூடியும் அடித்தும் உதைத்தும் அவரை சித்திரவதை செய்தனர் மெக்சிகோ காவலர்கள்.

பின்னர் மீண்டும் கனடா சிறைக்கு கொண்டு வரப்பட்டார் Régent Boily. சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு புகாரளித்தனர் அவரது வழக்கறிஞர்கள்.

புகாரை விசாரித்த சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பு சித்திரவதை அபாயம் இருந்தும் அவரை கனடா மெக்சிகோவுக்கு அனுப்பியது தவறு என்று தீர்ப்பளித்து அவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

அந்த உத்தரவின்படி இன்னும் அவருக்கு இழப்பீடு வழங்காததால், அவருக்கு வயதாகிக் கொண்டே செல்வதால் விரைந்து அவருக்கு இழப்பீடு வழங்குமாறு கனடாவை சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பு வற்புறுத்தியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers