என் மகனை மீட்டுத் தாருங்கள்: ஜஸ்டின் ட்ரூடோவிடம் கெஞ்சும் பெண்

Report Print Balamanuvelan in கனடா
191Shares
191Shares
ibctamil.com

தன் மகனை தன் முன்னாள் கணவரிடமிருந்து மீட்டுத் தருமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கனடாவில் வாழும் ஒரு பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அர்மீனிய பின்னணி கொண்ட Armen Avansiயை சந்தித்த Tammy Chan அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு Alex என்னும் மகன் பிறந்த சிறிது காலத்தில் இருவரும் பிரிந்தனர். குழந்தை யாரிடம் இருப்பது என்பது குறித்து முடிவு செய்ய இருவரும் நீதிமன்றம் சென்றனர்.

ஒண்டாரியோ நீதிமன்றம் ஒன்று Alex தாயிடம்தான் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் தன் மகனுடன் இருக்க விரும்புவதாகக் கூறி Armen குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

சென்றவர் சென்றவர்தான், அவர் குழந்தையை அர்மீனியாவுக்கே அழைத்துச் சென்றுவிட்டார்.

Tammy குழந்தையைப் பார்க்க வேண்டும் என துடித்தார். Armenஐத் தேடி அர்மீனியாவுக்கே சென்றார், அங்கு சென்றால் அவருக்கு மொழிப்பிரச்சினை.

ஒரு வழியாக வழக்கறிஞர் ஒருவரைப் பிடித்து, குழந்தையை அவ்வப்போது சென்று பார்க்கும் உரிமையை பெற்று விட்டார்.

என்றாலும் பலமுறை குழந்தையைப் பார்க்க Armenஇன் வீட்டுக்குச் சென்றபோது அவர்கள் வீட்டின் கதவைத் திறக்கவேயில்லை.

ஒரு சிலமுறை குழந்தையைப் பார்க்க Tammy அனுமதிக்கப்பட்டாலும், அவரைச் சுற்றி Armenஇன் குடும்பத்தார் அமர்ந்திருப்பார்கள்.

குழந்தையுடன் தனிமையில் நேரம் செலவிடக்கூட Tammyயால் முடியவில்லை. கடைசியாக la Francophonie உச்சி மாநாட்டிற்காக அர்மீனியாவுக்கு சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நம்பி கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார் Tammy.

எப்படியாவது அர்மீனிய அரசாங்கத்துடன் பேசி என் குழந்தையை நம் நாட்டுக்கு அழைத்து வர ஆவன செய்ய வேண்டும் என பிரதமரைக் கோரியுள்ளார் Tammy.

Tammyயையும் அவரது மகன் Alexஐயும் சேர்த்து வைப்பது இப்போது கனடா பிரதமர் கையில்தான் இருக்கிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்