தமிழர்களுக்கு கனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து

Report Print Balamanuvelan in கனடா

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வரும் நேரத்தில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா வாழ் தமிழர்களுக்கு தனது பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

கனடா தமிழ் சமுதாயம் நான்கு நாட்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறது.

இந்நிலையில் கனடாவில் வாழும் தமிழர்களுக்கு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகை என்பது கொண்டாட்டங்கள், மகிழ்ச்சி மற்றும் சமுதாயத்துக்கான நேரம்.

குடும்பங்களும் நண்பர்களும் கூடி அறுவடைக்காக நன்றி கூறி, பொங்கலிட்டு சர்க்கரைப் பொங்கலை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் நேரம் அது என்று கூறியுள்ள ட்ரூடோ, அறுவடைக் காலம் முடிந்து புத்தாண்டு துவங்கும் நேரத்தில், நாம் தமிழ் பாரம்பரிய மாதத்தையும் கொண்டாடுகிறோம் என்றார்.

இந்த விசேஷித்த நேரத்தில், தமிழ் கனேடியர்கள் நம் நாட்டின் வெற்றிக்காகவும், செழிப்புக்காகவும் ஆற்றிய பங்கை நினைவு கூறுகிறோம் என்று கூறிய அவர், என் சார்பிலும் என் மனைவி, குடும்பம் சார்பிலும் தைப்பொங்கலைக் கொண்டாடும் அனைவருக்குமே என் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கனடாவில் வாழும் தமிழர்கள், இலங்கை மற்றும் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள், அவர்கள் பெரும்பாலும் டொராண்டோ பகுதியில் வாழுகிறார்கள்.

2016ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அங்குள்ள தமிழர்களின் எண்ணிக்கை 157,000 ஆகும்.

டொரண்டோ, ஆசியாவுக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வாழும் இரண்டாவது பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்