கனடா எல்லையில் சிக்கிய காருக்குள் பிணம்! அதிர்ச்சிப் பின்னணி

Report Print Balamanuvelan in கனடா

அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைய முயன்ற கார் ஒன்றிற்குள் இறந்த ஒருவரின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து கியூபெக்கினுள் நுழைய முயன்ற கார் ஒன்றை எல்லையில் சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது பின் இருக்கையில் இருந்த ஒருவர் உயிரற்ற நிலையில் இருந்ததைக் கண்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

மருத்துவர்கள் பரிசோதனையில் அந்த நபர் இறந்து இரண்டு நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் இறந்தவர் பெயர் Fernand Drapeau (87) என்பதும் அமெரிக்காவிலிருக்கும்போது அவர் மாரடைப்பால் உயிரிழந்ததும் தெரியவந்தது.

அமெரிக்காவில் மருத்துவ செலவும், இறந்தவர்கள் உடலை கொண்டு வரும் செலவும் அதிகம் என்பதால், Fernandஇன் உடலை கனடாவுக்குள் கொண்டு வர முயற்சி செய்ததும் தெரிய வந்தது.

விசாரணை தொடரும் நிலையில், இதுவரை யார் மீதும், எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்