கனடாவில் அடுத்தடுத்து இருவர் மீது தாக்குதல்... ஒருவர் பரிதாபமாக மரணம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் இரண்டு பேர் அடுத்தடுத்து மர்மநபரால் தாக்குதலுக்கு ஆளான நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Regina நகரில் கடந்த புதன்கிழமை மதியம் நபர் ஒருவர் படுகாயத்துடன் கிடப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் 48 வயது நபரான அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை மர்ம நபர் அடித்ததோடு கத்தியால் குத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து வியாக்கிழமை 56 வயதான ஒரு நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயது நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜெய்ஸ்ரீ இஷியா ஜோல் (19) என்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இரண்டு சம்பவத்தையும் அவர் தான் செய்திருக்க கூடும் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers