சிரியாவில் குண்டு மழை பொழியும் துருக்கிக்கு கடிவாளம்.. கனடா எடுத்த அதிரடி முடிவு

Report Print Basu in கனடா
746Shares

வடக்கு சிரியாவில் துருக்கியின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக அந்நாட்டிற்கு குறிப்பாக ராணுவ உபகரணங்களுக்கு ‘புதிய ஏற்றுமதி அனுமதிகளை’ தற்காலிகமாக ரத்து செய்வதாக கனடா அறிவித்துள்ளது.

சிரியாவுக்குள் துருக்கியின் ராணுவ ஊடுருவலுக்கு கனடா கடும் கண்டனம் தெரிவிப்பதாக உலகளாவிய விவகார தொடர்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கை ஏற்கனவே பலவீனமான பிராந்தியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, மனிதாபிமான நிலைமையை மோசமாக்குகிறது மற்றும் துருக்கி உறுப்பினராக உள்ள ஐ.எஸ்-க்கு எதிரான உலகளாவிய கூட்டணி அடைந்த முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ளுகிறது.

கனடா அமைச்சகத்தால் வழங்கப்பட்ட பட்டியலின்படி, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட ஏற்றுமதி அனுமதிகள் ‘கட்டுப்படுத்தப்பட்ட சொத்துக்கள்’ அடிப்படையில் ராணுவ உபகரணங்களை உள்ளடக்கியது.

சிரியாவில் ஊடுருவிய துருக்கிக்கு பதிலளிக்கும் விதமாக பல ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்த இதேபோன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றும் வகையில் கனடாவின் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய விவகாரங்களின்படி, துருக்கியுக்கான கனடாவின் ஆயுத விற்பனை 2018 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 87 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்