தமிழர் ஒருவரின் மகளுக்கு கனேடிய அமைச்சரவையில் அளிக்கப்பட்டுள்ள கௌரவம்!

Report Print Balamanuvelan in கனடா

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது புதிய அமைச்சரவையை அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு கேபினட் அமைச்சர் பதவி கொடுக்கப்படுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நபர் அனிதா இந்திரா ஆனந்த் என்பவர் ஆவார்.

அத்துடன் கனடா அமைச்சரவையில் பங்கேற்கும் முதல் இந்துப் பெண்மணி என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

அத்துடன் கேபினட்டில் மூன்று இந்தோ கனேடிய அமைச்சர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது, அவர்கள் அனைவரும் சீக்கியர்கள்.

Photo: Twitter

அத்துடன் அவர்கள் ஏற்கனவே முந்தைய அரசில் உறுப்பினர்களாக இருந்தவர்கள். முதன்முறையாக அக்டோபர் தேர்தலில் வென்ற அனிதா, அமைச்சரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பொதுப்பணித்துறை வழங்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் Oakvilleஇல் இருந்து வெற்றி பெற்றுள்ளார் அனிதா. ரொரன்றோ பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராக பணியாற்றும் அனிதா, நோவா ஸ்கோஷியாவின் Kentvilleஇல் பிறந்தவர்.

அவரது பெற்றோர் இருவருமே மருத்துவத்துறையில் பணியாற்றியவர்கள்.

அனிதாவின் தாய் சரோஜ் ராம் பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்தவர். அத்துடன் அனிதாவின் தந்தை SV ஆனந்த் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்