கனடாவில் 11 வயது மகனை கொலை செய்த இளம்தாய்! அவரின் புகைப்படங்கள் வெளியீடு

Report Print Raju Raju in கனடா

கனடாவில் 11 வயது மகனை கொலை செய்ததாக அவன் தாய் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஒன்றாறியோ மாகாணத்தின் Thunder Bay நகரில் 2020ஆம் ஆண்டில் நடந்த முதல் கொலை இது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலிசார் கூறுகையில், புதன்கிழமை காலையில் அங்குள்ள வீட்டில் 11 வயது சிறுவன் சுயநினைவின்றி கிடந்தான்.

அவன் அருகில் 59 வயது நபர் காயங்களுடன் இருந்தார்.

இருவரையும் மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையில் சிறுவன் அங்கு உயிரிழந்துவிட்டான், காயமடைந்த நபருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

சிறுவனை கொலை செய்ததாக அவன் தாய் Courtney Marie Labelle என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்.

இது தொடர்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என கூறியுள்ளனர்.

இதனிடையில் சிறுவன் அருகில் இருந்த நபர் அவனுடைய உறவினர் என தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்