பேருந்தின் பின்னால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட இளம்பெண்: ஒரு வைரல் வீடியோ!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் பேருந்து ஒன்றின் பின்னால் ஒரு இளம்பெண் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், பின்னர் பிரபலமாவதற்காக வேண்டுமென்றே அந்த பெண் அப்படி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொன்றியலில், பேருந்து ஒன்று சாலையில் பயணிக்கும்போது, அதன் பின்பக்கமுள்ள கம்பி ஒன்றை பிடித்துக்கொண்டு இளம்பெண் ஒருவர் தரதரவென இழுத்துச் செல்லப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர், அதே பெண் பல்வேறு சாகசங்கள் செய்யும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் இருப்பது தெரியவந்தது.

எனவே, பிரபலமாவதற்காகவே அந்த பெண் பனி நிறைந்திருந்த சாலையில், பேருந்தின் பின் பக்கத்தை பிடித்துக்கொண்டு தொங்கியதும், வேண்டுமென்றே சாலையில் இழுத்துச் செல்லப்பட்டதும் தெரியவந்தது.

அந்த வீடியோ குறித்து தங்களுக்கு தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள மொன்றியல் பொலிசார், யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என எச்சரித்துள்ளதோடு, அது அபாயமானது என்றும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோருக்கு 1,000 முதல் 3,000 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அந்த இளம்பெண் யார் என் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்