திடீரென தோன்றிய யோசனையால் கோடீஸ்வரர்களான தாய் மற்றும் மகள்!

Report Print Raju Raju in கனடா

கனடாவில் திடீரென லொட்டரி டிக்கெட்கள் வாங்க வேண்டும் என தாய், மகளுக்கு தோன்றிய நிலையில் அதன் மூலம் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

Barrie நகரை சேர்ந்தவர் டயன் மாசன். இவர் மகள் பமீலா. இருவரும் சேர்ந்து வெளியில் சென்ற போது லொட்டரி டிக்கெட்கள் விற்பனை நிலையம் இருந்தது.

அப்போது இருவருக்கும் ஒரே நேரத்தில் லொட்டரி டிக்கெட்கள் வாங்க வேண்டும் என திடீரென தோன்றியது. அதன்படி டிக்கெட்களை டயனும், பமீலாவும் வாங்கினார்கள்.

இந்நிலையில் அதில் பரிசு விழுந்ததா என பமீலா சமீபத்தில் செல்போன் செயலி மூலம் பார்த்துள்ளார்.

பின்னர் தனது தாயை அழைத்த பமீலா, நமக்கு லொட்டரியில் $230,000 பரிசு விழுந்துள்ளது அம்மா என மகிழ்ச்சியுடன் கூறினார்.

இது குறித்து தாயும், மகளும் கூறுகையில், பரிசு பணத்தை எங்கள் குடும்பத்தாருக்கும் கொடுப்போம், இதோடு எங்களுக்கு இருக்கும் கடன்களையும் அடைக்கவுள்ளோம்.

இந்த தருணத்தை ஒன்றாக பகிர்ந்து கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers