பெண்களுக்கு முன் மாதிரியாக இருந்தார்! கனடாவில் விமான விபத்தில் உயிரிழந்த பெண் விமானி குறித்து வெளியான தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் விமான விபத்தில் உயிரிழந்த பெண் விமானி தொடர்பில் உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள Stave ஏரியின் வடக்குபகுதியில் கடந்த திங்கட்கிழமை சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

இதில் பெண் விமானியான Erissa Yong-Wilson (66) பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடன் பயணித்த 21 வயது பெண், காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் Erissa குறித்து Abbotsford Flying Clubன் தலைவர் George Aung Thin பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், Erissa ஒரு சிறந்த விமானியாக விளங்கினார். அவர் ஒரு நல்ல வழிகாட்டியாகவும், பெண் விமானிகளுக்கு மிகச்சிறந்த முன் மாதிரியாகவும் இருந்தார்.

Erissa-வின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என பதிவிட்டுள்ளார்.

இதனிடையில் இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்