கொரோனா கட்டுப்பாடுகளால் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு போகமுடியாதவர்களுக்காக இந்திய பெண் வகுத்துள்ள திட்டம்!

Report Print Balamanuvelan in கனடா

கனடா பல்கலைக்கழகம் ஒன்றில் பயிலும் இந்திய மாணவி ஒருவர், பண்டிகைக் காலங்களில் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாத மாணவிகளுக்காக ஒரு திட்டம் வகுத்திருக்கிறார்.

கனடாவின் Acadia பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு மார்க்கெட்டிங் பயிலும் மாணவி ஹனீஷா ரெல்வானி.

இந்தியர்களான நாங்கள் தீபாவளியும் கொண்டாடுவோம், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டும் கொண்டாடுவோம் என்று கூறும் ஹனீஷா, ஆனால், இந்த முறை இந்த கொரோனா கட்டுப்பாடுகளால் எங்களால் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்துடன் எந்த பண்டிகையையும் கொண்டாட முடியாது என்கிறார்.

ஆம், சொந்த நாடுகளுக்கு சென்றால், அங்கு ஒரு 14 நாட்கள் தனிமைப்படுத்தல், நாட்டிலிருந்து திரும்பி கனடாவுக்கு வந்தால் அங்கு ஒரு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் என்பதால், ஊருக்கு செல்வதால் மகிழ்ச்சி என்றாலும், இந்த அவஸ்தையையும் தவிர்க்க முடியாது.

ஆகவே, அவரைப்போலவே சொந்த நாடுகளுக்கு விடுமுறைக்கு செல்ல இயலாதவர்களுக்காக திட்டம் ஒன்றை வகுத்துள்ளார் ஹனீஷா.

Provided by The Canadian Press

Acadia பல்கலைக்கழக வெளிநாட்டு மாணவர்கள் கிளப்பின் தலைவராக இருக்கும் ஹனீஷா, பல்கலைக்கழக் வளாகத்துக்குள்ளேயே சொந்த நாட்டுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்காக இம்முறை பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

சர்வதேச மாணவர்கள் ஒருவருக்கொருவர் உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவர்.

தனிப்பட்ட முறையில், ஒரு இந்தியராக நவம்பர் மாதம் தீபாவளியைக் கொண்டாடும் நேரத்தில், பாரம்பரியப்படி சேலை கட்டிக்கொண்டு நேரலை வீடியோவில் குடும்பத்துடன் பண்டிகை கொண்டாட இருப்பதாக தெரிவிக்கிறார் ஹனீஷா.

குடும்பத்தில் ஒருவராக இருப்பதைக் காட்டும் முயற்சியாக, அதை இங்கிருந்துகொண்டே செய்ய இருக்கிறேன் என்கிறார் ஹனீஷா.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்