கனடாவில் மாலை நேரத்தில் சாலையின் குறுக்கு சந்திப்பில் பெண் ஒருவருக்கு நேர்ந்த கதி! விசாரிக்கும் பொலிசார்

Report Print Raju Raju in கனடா
382Shares

கனடாவில் சாலையில் நடந்து சென்ற பெண் மீது வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரிட்டீஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் தான் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது.

மாலை 5.30 மணியளவில் அங்குள்ள குறுக்கு சந்திப்பில் பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் ஒன்று அப்பெண்ணின் மீது மோதியது.

இதையடுத்து வலியால் அவதிக்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அப்பெண்ணின் உயிர் பிரிந்தது.

இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், குறித்த வாகனத்தின் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

வேகமாக வாகனம் ஓட்டியதாலோ அல்லது மது போதையில் வாகனத்தை இயக்கியதாலோ இந்த விபத்து நேரவில்லை.

சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்