கடைசியாக குடும்பத்தாருக்கு மெசேஜ் அனுப்பினார்! கனடாவில் 28 வயது இளம்பெண் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in கனடா
0Shares

கனடாவில் 28 வயதான இளம்பெண் காணாமல் போயுள்ளார்.

இது குறித்த தகவலை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி தைஷா லேம்ப் என்ற 28 வயது பெண் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கடைசியாக தனது குடும்பத்தாருடன் மெசேஜ் மூலம் பேசியுள்ளார். கடந்த 23ஆம் திகதி தான் இந்த மெசேஜை அனுப்பியிருக்கிறார்.

5 அடி 1 அங்குலம் உயரம் கொண்ட தைஷா சாதாரண உடல் வாகுடன் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் காணாமல் போன போது என்ன உடை அணிந்திருந்தார் என தெரியவில்லை.

மேலும் அவருக்கு நிலையான முகவரி இல்லை என கூறியுள்ள பொலிசார் தைஷா குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்