பிரபல நகைச்சுவை நடிகரின் மகன் கனடாவில் மரணம்! கோமா நிலைக்கு சென்ற பின்னர் பிரிந்த உயிர்

Report Print Raju Raju in கனடா
0Shares

பிரபல இந்திய நடிகர் காதர் கானின் மூத்த மகன் கனடாவில் உயிரிழந்துள்ளார்.

இந்தி திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் காதர் கான். இவரின் மூத்த மகன் அப்துல் குதுஸ் கனடாவில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்துலின் மரணத்துக்குக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இது குறித்து கனடாவில் உள்ள அவரின் உறவினர் ஷயிஸ்டா கூறுகையில், எங்கள் வீட்டில் இருந்து 15 நிமிட தூரத்தில் உள்ள வீட்டில் அப்துல் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

50களில் இருந்த அப்துலுக்கு கடந்த 15 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினை இருந்தது. ஏறக்குறைய 10 ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து வந்தார்.

கடந்த 6 மாதங்களாக மருத்துவமனையில் இருந்த அப்துல் மார்ச் 24 அன்று கடைசியாக பேசுவதைக் கண்டோம்.

மார்ச் 24 க்குப் பிறகு, அப்துல் கோமா நிலைக்குச் சென்றார். அதன் பிறகு அவர் ஒருபோதும் பேசவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்த அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்