ஆங்கிலப் பத்திரிக்கைகளில் நாளை வரும் செய்தி: கமல்ஹாசன் டுவிட்டரில் சூசகம்

Report Print Santhan in சினிமா

பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசன் புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கைகளில் நாளை வரும் செய்தி என டுவிட்டரில் பதிவேற்றம் செய்திருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திரைப்பட நடிகரான கமல்ஹாசன் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக கூறினார்.

இதற்கு தமிழக அமைச்சர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் , அ.தி.மு.க அரசின் மீது குறை சொல்ல ஜெயலலிதா இருக்கும் போது தைரியம் இருந்ததா? என கேள்வி கேட்டிருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கைகளில் நாளை வரும் சேதி என பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில் முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்று குறிப்பிட்டு இருப்பதால், சமூகவலைத்தளங்களில் அந்த டுவிட்டர் பதிவேற்றம் வைரலாக பரவி வருகிறது

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments