பாடசாலை மாணவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டாம் என கோரிக்கை

Report Print Aasim in சமூகம்
104Shares
104Shares
lankasrimarket.com

பாடசாலை மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதை நிறுத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன் அவ்வாறு தண்டனை வழங்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இலங்கையில் அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. எனினும் 2016.04.29ம் திகதி கொண்ட 2016 ன் 12ம் இலக்கம் கொண்ட பாடசாலை ஒழுக்கங்களை பேணுதல் எனும் சுற்றுநிருபத்தின் ஊடாக மாணவர்களை கடுமையாக தண்டிப்பதை கல்வி அமைச்சு தடை செய்துள்ளது.

அவ்வாறான தண்டனைகள் காரணமாக மாணவர்- ஆசிரியர் மத்தியிலான பிணைப்பு விரிசல் கண்டு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே மாணவர்களை கடுமையான முறையில் தண்டிக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக தகவல்களை அறிந்தவர்கள் அது தொடர்பாக 1929 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குத் தகவல்களை வழங்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்