முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் கால்கோள் விழா

Report Print Mohan Mohan in சமூகம்

முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் 2019ஆம் ஆண்டிற்கான கால்கோள் விழா இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் பாடசாலை முதல்வர் ச.விக்னேஸ்வரன் தலமையில் இன்று காலை 9.00 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தரம் 1 இற்கான புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளி ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பிரதி உதவிக்கல்விப் பணிமணைப் பொறுப்பாளர் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து சிற்ப்பித்துள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்