இந்தியாவில் அதிக முதலீடுகள் செய்யும் கூகுள்: சுந்தர்பிச்சை

Report Print Kabilan in நிறுவனம்

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, இந்தியாவில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘டெஸ்’ அப்ளிகேஷன் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைதொடந்து சுந்தர் பிச்சை, இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் இரண்டாவது காலாண்டுக்கான கூட்டத்தில் பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், எங்களது தயாரிப்புகள் பல லட்சம் மக்களுக்கு, குறிப்பாக ஆசிய மக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் ஆரம்பித்த ‘டெஸ்’ என்னும் மொபைல் பேமண்ட் மற்றும் வர்த்தக அப்ளிகேஷனை தற்போது 75 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் மூன்று கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் இந்தியாவில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறோம்.

கூகுள் மேப், யூடியூப் போன்ற சேவைகளை ஆசியாவிற்கு ஏற்ப மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்