தனது முடிவை மாற்றியது மைக்ரோசொப்ட்: காரணம் இதுதான்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

கணினிகளில் பயன்படுத்தப்படும் பிரபலமான விண்டோஸ் இயங்குதளங்களை வடிவமைத்து அறிமுகம் செய்வது மைக்ரோசொப்ட் ஆகும்.

இந்நிறுவனம் கடந்த ஜனவரி 14 ஆம் திகதி தொடக்கம் ஏற்கனவே அறிமுகம் செய்த விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கான பாதுகாப்பு அப்டேட்களை நிறுத்துவதாக அறிவித்திருந்தது.

காரணம் இவ் இயங்குதளத்தின் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10 என்பன உலகில் அதிகளவு கணினிகளில் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளமையாகும்.

இந்நிலையில் மீண்டும் விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கான பாதுகாப்பு அப்டேட்டினை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலை கருத்திற்கொண்டே இந்த அப்டேட் வெளியிடப்படவுள்ளது.

வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படும் கணினிகள் பாதுகாப்பானவையாக இருக்கவேண்டும் என்பதே இதற்கு காரணமாகும்.

எனினும் இந்த பாதுகாப்பு அப்டேட் ஆனது ஏனைய நாடுகளில் கிடைக்கப்பெறுமா என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்