முதன் முறையாக Zoom நிறுவனம் வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

அண்மைக்காலமாக இணையத்தளங்கள் எங்கும் Zoom அப்பிளிக்கேஷனைப் பற்றிய பேச்சுக்களே அடிபட்டு வருகின்றன.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்ப எதிர்மறையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் முதன் முறையாக Zoom ஒரு சீன நிறுவனம் இல்லை எனவும், அது ஒரு அமெரிக்க நிறுவனம் எனவும் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை Zoom நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Eric Yuan வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் சீன அரசாங்கத்திற்கும் Zoom நிறுவனத்திற்கும் தொடர்பு இருப்பதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தவிர இதன் தலைமையகம் கலிபோர்னியாவில் இருப்பதாகவும் தான் 1997 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருவதுடன் 2007 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜா உரிமை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் ப்ளாக் போஸ்ட் ஒன்றின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்