விற்பனை செய்யப்படுகின்றது TikTok நிறுவனம்: வாங்குவது யார் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகின் முன்னணி வீடியோ மீம்ஸ் அப்பிளிக்கேஷனான டிக்டாக் ஆனது பைட் டான்ஸ் எனும் தாய் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவருகின்றமை தெரிந்ததே.

இந்த நிறுவனம் சீனாவை தளமாகக் கொண்டு இயங்குகின்றது.

இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதனால் குறித்த அப்பிளிக்கேஷனுக்கு குறித்த நாடுகளில் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

எனவே இப் பிரச்சினையில் இருந்து தப்புவதற்கு டிக்டாக் நிறுவனத்தினை விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட்டிற்கு விற்பனை செய்வதற்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்த தகவலை அமெரிக்காவின் நியூயோர்ட் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

இதேவேளை மைக்ரோசொப்ட் தரவி வேறு அமெரிக்க நிறுவனங்களுக்கும் டிக் டாக் நிறுவனத்தினை விற்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்