ஐபிஎல்லா? இலங்கையா? லசித் மலிங்கா எடுத்த முடிவு

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐ.பி.எல் போட்டிகளை விட தேசிய அணியில் இடம்பெற்று விளையாடவே முன்னுரிமை அளிப்பேன் என லசித் மலிங்கா கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கும் வங்கதேச அணிக்கும் இடையேயான டி20 போட்டிகள் வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஏற்கனேவே இலங்கை அணி வங்கதேசத்துடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை சமன் செய்ததே தவர வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் நடக்கவிருக்கும் டி20 போட்டிகள் பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

டி20 போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா விளையாடவுள்ளார். அதே சமயத்தில் சில நாட்களில் தொடங்கவுள்ள ஐ.பி.எஸ் போட்டியின் மும்பை அணியில் மலிங்கா இடம் பெற்றுள்ளார்.

அவர் எதில் விளையாடுவார் என சந்தேகம் ஏற்பட்டுள்ள வேளையில் மலிங்கா விளக்கமளித்துள்ளார்.

ஐபிஎல்-யை விட தேசிய அணியில் இடம்பெறுவதற்கே முன்னுரிமை வழங்குவேன் என்றும், இலங்கை அணியின் வெற்றியே தனக்கு முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments