இந்தியாவுக்கு இப்படி ஒரு ராசியா? கலக்கத்தில் ரசிகர்கள்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் தொடர்களில் வங்கதேசத்தை வீழ்த்திய அடுத்த போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவிய நிகழ்வுகள் பலமுறை பதிவாகியுள்ள சம்பவம் இந்திய ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பியன்ஸ் கிண்ணம் தொடரின் அரையிறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் 18 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா சந்திக்கிறது. அதேநேரம், வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி அதற்கடுத்த போட்டியில் தோல்வியைத் தழுவிய நிகழ்வு இதுவரை 10 முறை நடந்துள்ளது. அவற்றில் 8 ஆசியக் கிண்ணம் தொடரில் இடம்பெற்ற போட்டிகள் என்பது இந்திய ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தை வீழ்த்திய அடுத்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த போட்டிகள்:

  • 1990 ஆசியக் கிண்ணம்- எதிரணி இலங்கை
  • 1995 ஆசியக் கிண்ணம்- பாகிஸ்தான்
  • 1997 ஆசியக் கிண்ணம்- இலங்கை
  • 2000 ஆசியக் கிண்ணம்- இலங்கை
  • 2004 ஆசியக் கிண்ணம்- பாகிஸ்தான்
  • 2008 ஆசியக் கிண்ணம்- பாகிஸ்தான்
  • 2014 ஆசியக் கிண்ணம்- இலங்கை
  • 2015 உலகக் கிண்ணம்- அவுஸ்திரேலியா

அதேபோல வங்கதேசத்தை வீழ்த்திய அடுத்த போட்டியில் இந்தியா வென்ற நிகழ்வு 5 முறை நடந்துள்ளது. அதில் 3 போட்டிகள் ஐசிசி உலகக் கிண்ணம் டி20 தொடரில் இந்தியா பெற்ற வெற்றிகளாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments