மந்திரவாதி ஆசியால் ஜெயித்ததா இலங்கை? பதிலளித்த பாகிஸ்தான் அணித்தலைவர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

துடுப்பாட்டத்தில் சரியாக செயல்படாததே இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர் தோல்விக்கு காரணம் என பாகிஸ்தான் தலைவர் சர்ஃப்ராஸ் அகமது கூறியுள்ளார்.

இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையில் சமீபத்தில் அரபு நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 என்ற கணக்கில் வென்றது.

இலங்கை வெற்றி பெற்றதற்கு தான் செய்த செய்வினை மற்றும் மந்திர செயல் தான் காரணம் என இலங்கை மந்திராவதி ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதை இலங்கை அணியின் விளையாட்டு துறை அமைச்சர் முற்றிலுமாக மறுத்ததோடு குறித்த மந்திரவாதி மீது வழக்கு தொடருவேன் என கூறினார்.

இந்நிலையில், தொடர் முடிந்து இலங்கை திரும்பிய அந்த அணியின் தலைவர் தினேஷ் சண்டிமால் பாகிஸ்தான் உடன் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்னர் மந்திரவாதியிடம் சிறப்பு ஆசிர்வாதம் பெற்றதாக கூறினார்.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள பாகிஸ்தான் அணித்தலைவர் அகமது, ஒரு இஸ்லாமியராக உலகில் ஒரு சக்தி இருக்கிறது என நம்புகிறேன்.

ஆனால் விளையாட்டில் எல்லாம் அதை தொடர்புபடுத்தி பார்க்கக்கூடாது, டெஸ்ட் தொடரில் துடுப்பாட்டத்தில் மோசமாக செயல்பட்டதால் தான் நாங்கள் தோற்றோம் என கூறியுள்ளார்.

அதே போல பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் முகமது யூசுப்பும் சண்டிமாலின் கருத்தை மறுத்துள்ளார்.

கிரிக்கெட்டுடன் இதுபோன்ற விடயங்களை சேர்க்கக்கூடாது எனவும் சரியாக விளையாடாததே பாகிஸ்தான் தோல்விக்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்