இரும்பு மனிதன் தலைமையில் புதிய இலங்கை அணி மீள அறிவிப்பு

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி மீளவும் இன்றுமாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு திசார பெரேரா தலைமையில் இலங்கை அணி அறிவிக்கப்பட்டாலும், இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்க தாமதமானதால் இந்தியாவுக்கு புறப்பட தயாராகவிருந்த இலங்கை அணியின் விமானப்பயணம் திடீரென நிறுத்தப்பட்டது.

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களை விடுத்து 9 வீரர்கள் விமான பயணத்துக்கு ஆயத்தமாக இருந்தநிலையிலேயே பயணம் தடைப்பட்டது.இவர்களது பயணம் நள்ளிரவு 12.30 க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று மாலை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இலங்கை கிரிக்கெட் அணிக்கான அனுமதியை வழங்கியுள்ளார்,நேற்று அறிவிக்கப்பட்ட அணியில் அதிரடி வீரர் குஷால் பெரேரா புதிதாக இணைக்கப்பட்டுள்ளார்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன அணி விபரம்.

 1. உப்புல் தரங்க
 2. தணுஷ்க குணதிலக
 3. நிரோஷன் டிக்வெல்ல
 4. சதீர சமரவிக்கிரம
 5. லஹிரு திரிமான்ன
 6. அஞ்சேலோ மத்தியூஸ்
 7. அசேல குணரத்ன
 8. சத்துரங்க டி சில்வா
 9. சச்சித் பத்திரன
 10. அகில தனஞ்சய
 11. துஷ்மந்த சமீர
 12. சுரங்க லக்மால்
 13. நுவான் பிரதீப்
 14. தனஞ்சய டி சில்வா
 15. குஷால் பெரேரா

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்