டோனிக்காக இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்: சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா

Report Print Kabilan in கிரிக்கெட்

டோனிக்காக இந்த முறை ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்-லின் 11வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை அணி இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்றுவிட்ட நிலையில், இன்று இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் நடக்க உள்ளது.

இந்த ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதும்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா கூறுகையில், ‘அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. டோனி, கொஞ்சம் Emotional ஆக இருக்கிறார். சென்னை அணி பற்றி அவர் அதிகம் கவலை கொண்டிருக்கிறார்.

சென்னை அணியில் 2008ஆம் ஆண்டில் இருந்து அவர் இருக்கிறார். அவருடன் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த முறை டோனிக்காக நாங்கள் ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்ல வேண்டும்.

டோனி ஒவ்வொரு முறையும் விமர்சனம் செய்யப்படுகிறார். அவர்களுக்கு தனது சிறப்பான அதிரடியால் அவர் பதிலளித்து வருகிறார். டோனியை அடுத்து இந்த தொடரில் வாட்சனும், ராயுடுவும் சிறப்பாக விளையாடினார்கள்.

எங்கள் அணி பல Match winner-களை கொண்டிருக்கிறது. 2011ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்லவில்லை. இந்த முறை கண்டிப்பாக வெல்வோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers