இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட தமிழக வீரர்: அதிரடி ஆட்டம் மூலம் கொடுத்த பதிலடி

Report Print Raju Raju in கிரிக்கெட்
573Shares
573Shares
lankasrimarket.com

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட தமிழக வீரர் முரளி விஜய் கவுண்டி கிரிக்கெட்டில் அசத்தலாக ஆடி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சரியாக விளையாடாத காரணத்தினால் அணியிலிருந்து முரளி விஜய் நீக்கப்பட்டார்.

எனினும், இங்கிலாந்து கவுன்டி அணியான எசக்ஸ் அணியில் இணைந்து ஆட முடிவு செய்த அவர் நேற்று நடந்த போட்டியில் பங்கேற்றார்.

அதில், எசக்ஸ் அணி, நாட்டிங்ஹம் அணிக்கு எதிராக ஆடியது. அதில் எசக்ஸ் அணிக்காக அரைசதம் அடித்துள்ளார் முரளி விஜய்.

இதன் மூலம் தன்னை அணியில் எடுக்காமல் விட்டது தவறு என தனது துடுப்பாட்டம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்