கேப்டன் ரோகித் தான்..ஆனால் பீல்டிங் செட் செய்து விக்கெட்டை தூக்கிய டோனி! வெளியான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது, ஷகிப் அல் ஹசனின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு ரோகித்திற்கு டோனி சரியான ஆலோசனை வழங்கியதால், அவர் பரிதாபாக விக்கெட்டை பரிகொடுத்து வெளியேறினார்.

ஆசியக்கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அபுதாபியில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகளும், துபாயில் இந்தியா- வங்கதேசம் அணிகளும் விளையாடி வருகின்றன.

இதில் சற்று முன் வரை முதலில் துடுப்பெடுத்தாடி வரும் வங்கதேசம் அணி 43.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இப்போட்டியின் போது ஜடேஜா வீசிய 10-வது ஓவரின் 2, 3 வது பந்தை சகிப் அல் ஹசன் ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரி அடிக்க, உடனே ரோகித்தை அழைத்த கோஹ்லி, அங்கு ஒரு பீல்டிங்கை நிறுத்தும் படி ரோகித்திடம் கூறினார்.

டோனியின் ஆலோசனையை கேட்டு, ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த தவானை தூக்கி அங்கு பீல்டிங் நிறுத்தினார். இதையடுத்து அடுத்த 9.4 பந்திலேயே சகிப் அல் ஹசன் அதே பகுதியில் பவுண்டரி அடிக்க முயல தவானிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதைக் கண்ட வர்ணனையாளர்கள் டோனி ஒரு அனுபவமான வீரர் என்பதை காட்டிவிட்டார் என்று புகழ்ந்தனர். அதைத் தொடர்ந்து டோனியின் ரசிகர்களும் அந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

என்ன தான் இந்திய அணிக்கு கேப்டன்கள் மாறிக் கொண்டு வந்தாலும் கோஹ்லி, ரோகித், ரகானே உட்பட இக்கட்டான சூழ்நிலையில் டோனியிடமே ஆலோசனை கேட்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers