அவுஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் சதத்தை பதிவு செய்த வீரர்! 482 ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான்

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணி வீரர் ஹரிஸ் சொகைல், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்துள்ளார்.

துபாயில் பாகிஸ்தான்-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.

நேற்றையை முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்புக்கு 255 ஓட்டங்கள் எடுத்திருந்தது. முகமது ஹபீஸ் 126 ஓட்டங்களும், இமாம்-உல்-ஹக் 76 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஹரிஸ் சொகைல் 15 ஓட்டங்களுடனும், முகமது அப்பாஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியது. பீட்டர் சிடில் பாகிஸ்தான் வீரர் முகமது அப்பாஸை ஒரு ரன்னிலேயே வெளியேற்றினார்.

அதன் பின்னர் களமிறங்கிய ஆசாத் ஷபிக், ஹரிஸ் சொகைலுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நிதானமாக விளையாடிய அவர், டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

மறுமுனையில் ஆசாத் ஷாபிக் அரைசதம் கடந்தார். இந்த ஜோடியின் ஆட்டத்தினால் பாகிஸ்தான் அணி 400 ஓட்டங்களை கடந்தது. அணியின் ஸ்கோர் 410 ஆக இருந்தபோது ஷாபிக் 80 ஓட்டங்களில் வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து வந்த பாபர் அசாம் 4 ஓட்டங்களில் அவுட் ஆனார். பின்னர் 240 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸருடன் 110 ஓட்டங்கள் எடுத்த ஹரிஸ் சொகைல் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சரிந்ததால், 482 ஓட்டங்களுக்கு அந்த அணி ஆல்-அவுட் ஆனது. அவுஸ்திரேலிய அணி தரப்பில் பீட்டர் சிடில் 3 விக்கெட்டுகளும், லயன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers