இந்திய பந்துவீச்சை புரட்டியெடுத்த நியூசிலாந்து வீரர்கள்! 212 ஓட்டங்கள் குவிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

ஹாமில்டனில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் குவித்துள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

தொடக்க வீரர்களான செய்ஃபெர்ட், முன்ரோ இருவரின் அதிரடி ஆட்டத்தினால் 8 ஓவர்களிலேயே நியூசிலாந்து 80 ஓட்டங்களை தொட்டது. 25 பந்துகளில் 43 ஓட்டங்கள் குவித்த செய்ஃபெர்ட் ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆனார்.

AP

அதன் பின்னர் அரைசதம் கடந்த முன்ரோ 40 பந்துகளில் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 150 ஆக உயர்ந்தபோது கேப்டன் வில்லியம்சன் 27 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

AP

பின்னர் வந்த கிராண்ட்ஹோம் அதிரடியாக 16 பந்துகளில் 30 ஓட்டங்களும், மிட்செல் 19 மற்றும் டெய்லர் 14 ஓட்டங்கள் எடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் குவித்தது.

குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் மற்றும் கலீல் அகமது இருவரும் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி இமாலய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers