ஐபிஎல் டி20 போட்டி: மிரட்டிய வார்னர்.....6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

ஐபிஎல் டி20 போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் பௌலிங்கைத் தெரிவு செய்தது.

சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், பேர்ஸ்டோவும் களமிறங்கினர். இருவரும் தங்களது அதிரடி ஆட்டத்தால் 100 ரன்களை சேர்த்தனர்.

அணியின் எண்ணிக்கை 118 ஆக இருந்த போது பேர்ஸ்டோ 39 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் 53 பந்துகளில் 3 சிக்சர், 9 பவுண்டரி விளாசி 85 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய யூசுப் பதான் ஒரு ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 40 ரன்களுடனும், மணிஷ் பாண்டே 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4.ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...