தொடக்கமே எங்களுக்கு சிறப்பாக இருந்தது.. நெகிழ்ந்த தினேஷ் கார்த்திக்! தோல்வி குறித்து அஸ்வின் கூறியது என்ன?

Report Print Kabilan in கிரிக்கெட்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்கமே சிறப்பாக இருந்ததால் வெற்றி பெற்றதாக, கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்நிலையில் வெற்றி குறித்து கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் கூறுகையில்,

‘இந்தப் போட்டியின் தொடக்கமே எங்களுக்கு சிறப்பாக இருந்தது. நிதிஷ் ரானாவின் ஆட்டம் மிகவும் அழகாக இருந்தது. இதேபோல உத்தப்பாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் ரசல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காயத்தில் இருந்து குணமடைந்த சுனில் நரேன் திரும்பி இருக்கிறார். அவர் எப்போதுமே சவாலாக இருந்தார்.

BCCI

தோல்வி குறித்து பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் கூறுகையில், ‘No Ball-யினால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். சிறிய தவறுகள் ஆட்டத்தை மாற்றி விடும்.

219 ஓட்டங்கள் எடுக்க கூடிய இலக்குதான். நாங்கள் செய்த தவறுகளால் தோல்வி ஏற்பட்டது. பேட்டிங் தான் ஆட்டத்துக்கு மிகவும் அவசியம்’ என தெரிவித்துள்ளார்.

IANS

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்