கைக்கு எட்டிய வெற்றியை பறிகொடுத்த டெல்லி அணி! செய்த மோசமான சாதனை

Report Print Kabilan in கிரிக்கெட்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் 5 பேர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனை படைத்துள்ளனர்.

ஐ.பி.எல் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி-பஞ்சாப் அணிகள் மோதின. பரப்பான இந்த போட்டியில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 167 ஓட்டங்கள் இலக்கை நோக்கிய டெல்லி அணி விளையாடியது.

தவான் 30 ஓட்டங்களும், ஷிரேயாஸ் ஐயர் 28 ஓட்டங்களும் எடுத்து அவுட் ஆகினர். பின்னர் ரிஷாப் பண்ட், இங்கராம் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

டெல்லி அணி 144 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் என வலுவான நிலையில் இருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு 21 பந்துகளில் 23 ஓட்டங்களே தேவைப்பட்ட நிலையில் ரிஷாப் பண்ட் அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து வந்த மோரிஸ் ரன்-அவுட் ஆனார். பின்னர் வந்த ஹர்ஷல் படேல், ரபாடா மற்றும் சந்தீப் லமிச்ஹனே ஆகியோர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

இதனால் டெல்லி அணி எளிதில் வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வியடைந்தது. அந்த அணியில் மொத்தம் 5 வீரர்கள் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

இதன்மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு அணியில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் அதிக வீரர்கள் விக்கெட்டை இழப்பதில் டெல்லி அணி மீண்டும் இடம்பிடித்துள்ளது. இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டு மும்பைக்கு எதிரான போட்டியில், டெல்லி அணியில் 5 வீரர்கள் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தற்போது இரண்டாவது முறையாக அதே டெல்லி அணியில் 5 வீரர்கள் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்திருப்பது மோசமான சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஓட்டங்கள் எடுக்காமல் அதிக விக்கெட்டுகளை பறிகொடுத்த அணிகள்
கொச்சி - 6 வீரர்கள் (2011)
டெல்லி - 5 வீரர்கள் (2011)
பெங்களூரு - 5 வீரர்கள் (2008)
டெல்லி - 5 வீரர்கள் (2019)

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்