ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ரோஹித் ஷர்மா! எச்சரிக்கையுடன் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்

Report Print Kabilan in கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா களத்தில் ஸ்டம்பை தட்டியதால், ஐ.பி.எல் நிர்வாகம் எச்சரிக்கையுடன் அபராதம் விதித்துள்ளது.

கொல்கத்தாவில் நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 232 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

மும்பை அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 13 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். ஆனால், அது குறித்து அவர் நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். அத்துடன் வெளியேறும்போது ஸ்டம்பை தட்டிவிட்டுச் சென்றார்.

ஒரு அணியின் தலைவர் இதுபோன்று ஒழுக்கக் குறைவாக நடந்துகொண்டது பெரும் விமர்சனத்திற்குள்ளானது. அதன் பின்னர் களநடுவர்கள் போட்டி முடிந்ததும் ரோஹித் ஷர்மாவின் செயல்பாடு குறித்து புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து போட்டி நடுவர் நடத்திய விசாரணையில் ரோஹித் தனது தவறை ஒப்புக்கொண்டார். எனவே, ஒழுக்கக் குறைவாக நடந்துகொள்ளக் கூடாது என எச்சரித்த போட்டி நடுவர், அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவிதத்தை அபராதமாக விதித்தார்.

முன்னதாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக, ரோஹித் ஷர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்