லோகேஷின் அதிரடி தொடக்கம்: சென்னை சூப்பர் கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் 55-வது லீக் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.

பஞ்சாப் அணி 18 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் டு பிளிசிஸ் (96), சுரேஷ் ரெய்னா (53) ஆகியோரின் சிறந்த பேட்டிங்கால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல் ஆகியோர் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

லோகேஷ் ராகுல் முதலில் இருந்தே சிக்ஸர், பவுண்டரிகள் என அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பஞ்சாப் அணியின் ஸ்கோர் 10.3 ஓவரில் 108 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது.

ஹர்பஜன் சிங் வீசிய 11-வது ஓவரின் 3-வது பந்தில் லோகேஷ் ராகுலும், 4-வது பந்தில் கிறிஸ் கெய்லும் ஆட்டமிழந்தனர்.

லோகேஷ் ராகுல் 36 பந்தில் 7 பவுண்டரி, ஐந்து சிக்சர்களுடன் 71 ரன்கள் குவித்தார். கிறிஸ் கெய்ல் 28 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார்.

இவர்களை தவிர பஞ்சாப் அணியில், பூரன் 22 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 36 ரன்கள் குவித்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

பஞ்சாப் அணி 18 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers