பல வீரர்களின் வாழ்க்கையை அழித்தவர் ஷாகித் அப்ரிடி! பாகிஸ்தான் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Kabilan in கிரிக்கெட்

ஷாகித் அப்ரிடி பல வீரர்களின் வாழ்க்கையை சுயநலத்துக்காக அழித்தவர் என்று பாகிஸ்தான் வீரர் இம்ரான் பர்கத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, தனது சுயசரிதை புத்தகத்தை ‘The Game Changer' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.

அந்த புத்தகத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான மியாண்டட், வாக்கர் யூனூஸ் மற்றும் இந்திய முன்னாள் வீரர் காம்பீர் ஆகியோரை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அத்துடன் தனது வயது தொடர்பான விவரத்தை வெளியிட்ட அவர், குறைந்த பந்தில் சதம் விளாசி சாதனை படைத்த போது விளையாடிய பேட், சச்சின் டெண்டுல்கருடையது என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஷாகித் அப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் பர்கத் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘அப்ரிடி பல வீரர்களின் வாழ்க்கையை சுயநலத்துக்காக அழித்தவர். அவர் 20 வயது என்று பொய் கூறியது மிகவும் அவமானம். இப்படி சொல்பவர் எப்படி சிறப்பான வீரர்களை குறை சொல்ல முடியும்’ என விளாசியுள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...