நாடு திரும்புகிறார் இலங்கை நட்சத்திர வீரர் லசித் மலிங்கா

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கை அணியின் அனுபவம் மிக்க நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொழும்பில் உள்ள மலிங்காவின் மாமியர் காந்தி பெரேதா இன்று காலை 8 மணியளவில் காலமானார். இந்நிலையில் அவரது இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்ள லசித் மலிங்கா நாடு திரும்பவுள்ளார்.

இன்று வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் லசித் மலிங்கா விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கு பின் அவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அதன் பின் 13ம் திகதி நடைபெறும் இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ள மலிங்கா, எதிர்வரும் யூன் 15ம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers