உலகக்கோப்பை அரையிறுதி... நங்கூரம் நின்று விளையாடிய கேப்டன் வில்லியம்சன் அவுட் - நேரலை

Report Print Kabilan in கிரிக்கெட்
436Shares

இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

மான்செஸ்டர் நகரின் ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி நடைபெறுகிறது.

விராட் கோஹ்லியின் தலைமையில் வெற்றிகளை குவித்து வந்த இந்திய அணி, இரண்டு தோல்விகளை மட்டுமே சந்தித்து அரையிறுதியை சந்திக்கிறது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 5 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி அரையிறுதிக்குள் வந்துள்ளது.

இந்தப் போட்டிக்காக மைதானத்திற்கு வந்த ரசிகர்கள் சிலர், தலைமையில் கோப்பையுடன் காற்றாடி இருப்பது போன்ற தொப்பிகளை அணிந்து கொண்டு வந்துள்ளனர். மைதானத்திற்கு வெளியே சில ரசிகர்கள் மேளதாளம் அடித்தனர். இன்னும் சிலர் இந்திய அணி வெற்றி பெற யாகம் நடத்துகின்றனர்.

இந்நிலையில், இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் களமிறங்கினர்.

போட்டியின் 4வது ஓவரை வீசிய பும்ரா, நியூசிலாந்து வீரர் மார்டின் கப்திலை ஆட்டமிழக்க செய்தார். கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்த கப்தில் ஒரு ரன்னில் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து, அணித்தலைவர் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். அவர் நிதான ஆட்டத்தை கடைபிடித்த நிலையில், மறுமுனையில் நிக்கோலஸ் 28 ஓட்டங்களில் ஜடேஜாவின் பந்துவீச்சில் போல்டானார்.

பின்னர் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் களமிறங்கினார். அவருடன் கைகோர்த்த கேப்டன் வில்லியம்சன், அணியை மீட்கும் பொருட்டு நிதான ஆட்டத்தை கடைபிடித்தார். நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார் வில்லியம்சன்.

அணியின் ஸ்கோர் 134 ஆக உயர்ந்தபோது கேப்டன் வில்லியம்சன் 67 (95) ஓட்டங்களில் சஹால் பந்துவீச்சில் அவுட் ஆனார். நியூசிலாந்து அணி தற்போது வரை 38 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்