அசுர வேகத்தில் அசத்திய இங்கிலாந்து: தட்டுத்தடுமாறி 241 ஓட்டங்கள் எடுத்த நியூசிலாந்து (நேரலை)

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 241 ஓட்டங்கள் எடுத்தது.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றிபெறும் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும். நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் தெரிவு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கப்டில் (19) ஏமாற்றினார். அணித் தலைவர் வில்லியம்சன் (30) நிலைக்கவில்லை.

டெய்லர் (15) சொதப்பலாக வெளியேறினார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோல்ஸ் (55) அரைசதம் அடித்து வெளியேறினார்.

நீசம் (19), கோலின் டி கிராண்ட்ஹோம் (16) ஏமாற்றினர். கடைசி நேரத்தில், லதாம் (47) ஓரளவு கைகொடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 241 ஓட்டங்கள் எடுத்தது.

இப்போட்டியில் கடைசி 15 ஓவர்களில் ஒரே ஒரு ஓவரில் மட்டுமே நியூசிலாந்து அணி 10 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தது. தவிர, கடைசி 5 ஓவரில் (45-50வது ஓவர்கள்) நியூசிலாந்து அணி வெறும் 30 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 242 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers