ராணுவ உடையில் கம்பீரமாக காரிலிருந்து இறங்கிய டோனி! வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனி ராணுவ பயிற்சி மேற்கொள்ள சென்றுள்ள நிலையில், காரில் இருந்து ராணுவ உடையில் அவர் இறங்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினண்ட் கர்னலாக இருக்கும் டோனி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை தவிர்த்து ராணுவ வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற உள்ளார்.

இதற்காக இந்திய ராணுவ தளபதி அவருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் டோனி ராணுவ உடையில் காரில் இருந்து கம்பீரமாக இறங்கி நடந்து வரும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்