கோஹ்லி மாதிரி வரவேண்டியவன் நான்.. இவர்களால் தான் இப்படி ஆனேன்! பாகிஸ்தான் வீரர் பரபரப்பு புகார்

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனக்கு போதிய வாய்ப்புகள் அளித்து இருந்தால், கோஹ்லி மாதிரி நானும் சாதனை வீரராக உருமாறி இருப்பேன் என்று உமர் அக்மல் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அக்மல் சகோதரர்கள் ஒரு கட்டத்தில் அணியில் கலக்கினர். குறிப்பாக இளம் வயதில் அறிமுகமான உமர் அக்மல் திறம்பட செயல்பட்டார். உமர் அக்மல் 121 ஒருநாள் போட்டிகளில் 3194 ஓட்டங்களும், 16 டெஸ்ட் போட்டிகளில் 1003 ஓட்டங்களும், 82 டி20 போட்டிகளில் 1690 ஓட்டங்களும் விளாசியுள்ளார்.

ஆனால், அவருக்கான வாய்ப்புகள் சரியாக அளிக்கப்படவில்லை. திறமைமிக்க உமர் அக்மல் தற்போது கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி20 போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது பரபரப்பு புகாரை உமர் அக்மல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

‘இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கோஹ்லிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முழு ஆதரவு அளித்து வருகிறது. சரியான வழிகாட்டுதல், சுதந்திரம் காரணமாக சிறந்த வீரராக மாற முடிந்தது. இப்போதும் கோஹ்லிக்கு கிரிக்கெட் வாரியத்தின் சுதந்திரம் மற்றும் வழிகாட்டுதல் கிடைத்து வருகிறது. பெரிய தொடர்களில் என்னை அவர்கள் தேர்வு செய்யவே இல்லை.

நான் சரியாக விளையாடாதது காரணமாக இருக்கலாம். ஆனாலும் அந்த நேரத்தில் என்னை நம்பி மீண்டும் வாய்ப்பு வழங்கி இருக்கலாம். நானும், கோஹ்லி போல ஒரு சாதனை வீரராக மாறியிருப்பேன். ஆனால், எனக்கு அப்படி கிடைக்கவில்லை. அது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

கோஹ்லி அறிமுகமான 2009ஆம் ஆண்டில் தான், தற்போது 29 வயதாகும் உமர் அக்மலும் அறிமுகமானார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரால் இன்றுவரை விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது நீக்கம் குறித்து பலமுறை முன்னாள் வீரர்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்