ஐபிஎல் கிண்ணத்தை வென்றது மிகப்பெரிய சாதனை.. எனது வாழ்வில் இதை செய்தே ஆக வேண்டும்: தென் ஆப்பிரிக்க அணித்தலைவர்

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர் குவிண்டன் டி காக், உலகக் கிண்ணத்தை வெல்வது தனது வாழ்வில் மிகப்பெரிய சாதனையாகும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. அதனைத் தொடர்ந்து, 2வது டி20 போட்டி இன்று இரவு நடக்கிறது. இந்தப் போட்டி குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த டி காக், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘நான் என்ன கூற வேண்டும்? நான் இதுவரை வெற்றி பெற்றதில் மிகப்பெரிய விடயம். நான் உலகக் கிண்ணத்தை இதுவரை வென்றது கிடையாது. ஆகவே, ஒரு முறை நான் உலகக் கிண்ணத்தை வென்றால், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் செய்ததை விட, அது மிகப்பெரியதாக இருக்கும்.

நான் ஒன்றிரண்டு அணிகளுக்கான ஐ.பி.எல் தொடரில் விளையாடிள்ளேன். அந்த அணிகள் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியதில்லை. நான் மும்பை அணிக்காக விளையாடினேன். அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆகவே, எந்தவொரு கிரிக்கெட்டருக்கும் இது மிகப்பெரிய சாதனையாகத்தான் இருக்கும். தற்போது கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும். உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடும் அணியில் ஒரு வீரராக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

தனிப்பட்ட முறையில் இது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டதாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். என்னுடைய கருத்து என்னுடையது. அவர்களுடைய கருத்து அவர்களுடையது. ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றது இதுவரை என்னுடைய மிகப்பெரிய சாதனை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers