திடீரென மைதானத்திற்குள் அத்துமீறி கோஹ்லியை நோக்கி ஓடி வந்த நபர்கள்.. பொலிசாரின் அதிரடி நடவடிக்கை!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2வது டி20 போட்டியின்போது, அத்துமீறலில் ஈடுபட்ட மூன்று கோஹ்லி ரசிகர்களை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மொஹாலியில் நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் போது மூன்று ரசிகர்கள் தடுப்பை மீறி மைதானத்திற்குள் நுழைந்துள்ளனர்.

சந்தீப் குமார் என்ற கோஹ்லியின் ரசிகர், அவருடன் கை குலுக்க வேண்டும் எனக் கூறி பொலிசாரை ஏமாற்றி, அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்துள்ளார்.

PTI
ANI
AP

மற்றொரு பகுதியில் இருந்து ராஜேஷ் குமார் என்ற ரசிகர் தடுப்பை எகிறி குதித்து உள்ளே நுழைந்துள்ளார். அதன் பின்னர் பவன் குமார் என்ற ரசிகர், பொலிசார் ஒருவர் தடுக்க முயன்றபோது அவரை மீறி உள்ளே நுழைந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் பிடித்த பொலிசார், காவல்துறையை பணி செய்ய விடாமல் தடுத்தல் என்ற குற்றப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கோஹ்லி ரசிகர்களான மூவரும், தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்